Wednesday, August 29, 2012

உங்கள் பதிவுகள் பிறரின் வலைப்பூக்களில் தெரிய வேண்டுமா?!

நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வலைப்பூக்கள் வைத்திருந்தால், ஒரு வலைப்பூவின் முகப்பில் மற்றதன் சமீப பதிவுகளை காண்பிக்க விரும்பலாம் (ஒரு விளம்பரம்தான் ;) இடது பக்கம் பார்க்க!). அல்லது உங்கள் அபிமான வலைப்பூக்களில் ஏதாவது ஒன்றின் - உதாரணத்திற்கு Bladepedia-வின், சமீபத்திய சில பதிவுகளை உங்கள் வலைப்பூ முகப்பில் பட்டியலிட விரும்பலாம்! அப்படிச் செய்ய உங்களுக்கு அந்த வலைப்பூவின் RSS feed அட்ரஸ் தெரிந்திருக்க வேண்டும்! Bladepedia-வின் RSS feed இதோ:
http://www.bladepedia.com/feeds/posts/default

ப்ளாகின் Layout பகுதிக்கு சென்று 'Feed' Gadget-ஐ நிறுவுங்கள்!

www.blogger.com --> உங்கள் ப்ளாக் பெயர் மீது ஒரு கிளிக் --> இடப்பக்கம் Layout மீது ஒரு க்ளிக் --> வலப்பக்கம் தேவையான இடத்தில் "Add Gadget" மீது ஒரு க்ளிக் --> Basics --> Feed --> "Configure Feed" Gadget இப்போது திறக்கும் --> "Feed URL"-க்கு எதிரே http://www.bladepedia.com/feeds/posts/default என்ற முகவரியை கொடுத்து விட்டு "Continue" மீது ஒரு க்ளிக்! படத்தில் காட்டியது போல், Feed-க்கான தலைப்பு, எத்தனை பதிவுகள் தெரிய வேண்டும் போன்ற விவரங்களை தெரிவு செய்து விட்டு --> Save மீது ஒரு க்ளிக்! --> அவ்ளோதான்!

இப்போது உங்கள் வலைப்பூவை (ரெப்ரெஷ் செய்து) பார்த்தால், ப்ளேட்பீடியாவில் இருந்து சமீபத்திய 5 பதிவுகளின் சுட்டிகள் உங்கள் வலைப்பூவை அலங்கரிக்கும்! உங்களுக்கு Bladepedia பிடிக்கவில்லை என்றால், மாறாக இந்த feed முகவரியை கூட பயன்படுத்தலாம்: http://www.kuttiblade.com/feeds/posts/default - அல்லது யாருடைய வலைப்பூவில் உங்களுடைய பதிவுகள் தெரியவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்களிடம் உங்கள் வலைப்பூவின் RSS Feed முகவரியை கொடுத்து மேற்காணும் முறையை பின்பற்ற சொன்னால் போதுமானது! அப்பாடா தலைப்பு Justified!

21 comments:

  1. உங்க கண்ணுல பதிவுலகின் டாக்டர்-ங்ற பட்டத்தை எங்கள் அப்துல் பாஸித்திடம் இருந்து தட்டி பறித்துவிட வேண்டும் என்கிற வெறி தெரிகிறது! ஆனால்...

    அதுக்கெல்லாம் தீயா வேலை செய்யணும்னே... தீயா வேலை செய்யணும்.... :D

    ReplyDelete
    Replies
    1. யாரையும் வுட மாட்டேன்! நெக்ஸ்டு வரலாறு சப்ஜெக்ட்தான் - ஆங்! ;)

      Delete
    2. //உங்க கண்ணுல பதிவுலகின் டாக்டர்-ங்ற பட்டத்தை எங்கள் அப்துல் பாஸித்திடம் இருந்து தட்டி பறித்துவிட வேண்டும் என்கிற வெறி தெரிகிறது! //

      அதுமட்டும் இல்லை நண்பா, அவரின் மேலுள்ள பின்னூட்டம் மூலம் உங்களுடைய "வாழும் வரலாறு" பட்டத்தையும் தட்டி பறித்துவிட வேண்டும் என்கிற வெறி தெரிகிறது!

      :D :D :D

      Delete
    3. @குட்டிப்ளேட்

      வரலாறு வேண்டாம், நீங்கள் "பூலோக சுவடுகள்" பற்றி எழுதுங்கள்.

      :D :D :D

      Delete
  2. நல்லதொரு தகவலுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. அடுத்து மினி பிளேடு, அரை பிளேடு, ஜுனியர் பிளேடு, என சீக்கிரம் ஆரம்பித்து கலக்குங்கள் ............ வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
    Replies
    1. :) :) ஆரம்பிக்கலாம்தான்! அப்புறம் மினிலயன், திகில் காமிக்ஸ் கதி எனக்கும் வந்துரக்கூடாதே! ;)

      Delete
  4. இதற்கு லோகோவாக ஒரு அரை பிளேடு படத்தை போட்டால் என்ன...?

    ReplyDelete
    Replies
    1. ப்ளேடு புது லோகோ டிசைன் நடைபெற்றுக் கொண்டுள்ளது! ;)

      Delete
  5. பயனுள்ள தகவல் கார்த்திக்.
    அப்படியே டாப் commentators gadget எப்படி சேர்ப்பது எண்ணத்தையும் கூறுங்கள் நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கிருஷ்ணா! இதோ நீங்கள் கேட்ட தகவல்! :)
      http://www.bloggertrix.com/2011/05/how-to-add-top-commentators-gadget-to.html

      Delete
  6. முகவரியை தவறாக கொடுத்துள்ளீர்கள் சகோ.!

    http://www.bladepedia.com/feeds/posts/default

    இது http://www.bloggernanban.com/feeds/posts/default என்று இருக்க வேண்டும்.

    :D :D :D

    ReplyDelete
    Replies
    1. கீ போர்டில் ஏதோ பிரச்சினை! bloggernanban என்று அடித்தால் bladepedia என்றே வருகிறது! ;)

      Delete
  7. நல்ல தகவல் நண்பா. நமது வலைப்பூவில் செயல்படுத்திவிட்டேன் நன்றி.

    எனக்கு "You might also like:" option உருவாக்குவது பற்றி தகவல் வேண்டுமே...

    ReplyDelete
    Replies
    1. it is easy to setup, just give your email id & blog name to get started:
      http://www.linkwithin.com/

      here is a howto!
      http://adsensetutorialz.blogspot.in/2011/12/how-to-add-linkwithin-widget-to-blogger.html

      Delete
  8. நன்றி நண்பா நல்ல விஷயம்!

    ReplyDelete
  9. நிறைய நண்பர்களது பதிவுகளை காட்ட வேண்டுமானால்?

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு வலைப்பூ முகவரிக்கும் அதே gadget-ஐ இந்த முறையில் இணைக்க வேண்டும்! :)

      Delete

No Word Verification, No Comment Moderation & No Anony filtering!

Note: Only a member of this blog may post a comment.