Friday, September 7, 2012

CFL-ஆ, டியூப் லைட்டா?!

CFL-தான் சிறந்தது என்று எல்லாரும் சொல்கிறார்கள். ஆனால், ஹாலிலோ அல்லது பெரிய அறைகளிலோ CFL பல்புக்களை மாட்டினால் தூங்கி வழிகிறது! என்னதான் 20W அல்லது 30W CFL வாங்கிப் போட்டாலும், ஒரு சாதாரண டியூப் லைட்டின் வெளிச்சத்தை அடித்துக்கொள்ள முடியாது! 9W CFL பல்ப்பின் வெளிச்சம், 40W குண்டு பல்ப்பின் வெளிச்சத்துக்கு ஒப்பானது என்று வாங்கும்போது நமக்கு பல்பு கொடுக்கிறார்கள்! :D ஆனால், அதுவோ ஒப்புக்குத்தான் வெளிச்சம் தருகிறது. பால்கனி, சிறிய அறை, குளியலறை, கழிவறை இவற்றிற்கு மட்டும்தான் இவை உகந்தது என்று நினைக்கிறேன்! 5W மஞ்சள் நிற CFL-ஐ படுக்கையறையில் போட்டால், அந்த மந்த வெளிச்சத்தில் உடனே தூக்கம் வந்து விடுகிறது! :D வீட்டில் எல்லா அறைகளிலும் CFL இருக்கிறது - மந்தகாசமான மாலை வேளைகளிலும், அதிக நேரம் TV பார்க்கும் போதும் மட்டுமே அவை உபயோகமாகின்றன! மற்ற சமயங்களுக்கு, சாதாரண டியூப் லைட் 36W என்பதால் அதற்கு பதிலாக 28W ஸ்லிம் லைன் டியூப் லைட் செட்களை மாட்டி இருக்கிறேன்! சான்சே இல்லை, ஒளிமயமான வாழ்வுதான்! :) மூன்று வருடங்களில் ஒரு தடவை கூட ஃப்யூஸ் ஆனது கிடையாது! :)

இன்னும் சில வருடங்களில் LED லைட்டுகள், CFL-இன் இடத்தை கைப்பற்றி விடும்! ஆனால் டியூப் லைட்டுகளின் எதிர்காலம் இன்னமும் பிரகாசமாகவே உள்ளது என்று நினைக்கிறேன்! :)

9 comments:

  1. டியூப் லைட் சன்னமாக (Diameter) உள்ளது என்று சொல்லுங்க...

    ReplyDelete
  2. //டியூப் லைட்டுகளின் எதிர்காலம் இன்னமும் பிரகாசமாகவே உள்ளது//

    என்னடா என்ன யாரும் கண்டுக்கலையேன்னு பார்த்தேன்.
    உங்க வாழ்த்துகளுக்கு நன்றி கார்த்தி :-)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா, இப்ப எல்லாம் பழைய மாதிரி இல்ல! எலெக்ட்ரானிக் சோக் இருக்கறதினால டியூப் லைட் சட்டுன்னு எரியும்! ;)

      Delete
  3. என்ன இருந்தாலும் டியூப் லைட்....... டியூப் லைட்தான்! :)

    (இதுக்கு என்ன ரிப்ளை போடுவிங்கன்னு பார்க்கணும்:D )

    ReplyDelete
    Replies
    1. மேல சொன்ன பதில்தான் உங்களுக்கும்! இது சட்டுன்னு எரியற டியூப் லைட்! ;)

      Delete
  4. CFL ளினால் நீங்கள் நிறைய அனுபவுதுள்ளீர்கள் போல் உள்ளதே.
    நீங்கள் கூறியது போல டியூப் லைட் இன் வெளிச்சம் வேறு எதுவும் தருவதில்லை.

    ReplyDelete
    Replies
    1. இரவில் காமிக்ஸ் படிக்க சிறந்த லைட், டியூப் லைட்... டியூப் லைட்... டியூப் லைட்!!! :D

      Delete
  5. டியூப் லைட்....... டியூப் லைட்தான்!

    ReplyDelete

No Word Verification, No Comment Moderation & No Anony filtering!

Note: Only a member of this blog may post a comment.