Wednesday, August 29, 2012

புது டம்ளரில் குடிக்க மாட்டேன்!

புதிய ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களில், அவற்றை தயாரித்த அல்லது விற்பனை செய்யும் நிறுவனங்களின் ஸ்டிக்கர்கள் ஒட்டி இருப்பதை கவனித்திருப்பீர்கள்! அந்த ஸ்டிக்கரை பிரிக்க முயற்சி செய்திருக்கிறீர்களா?! துணிகளில் இருக்கும் கிரீஸ் கரையை கூட நீக்கி விடலாம் ஆனால் இந்த ஸ்டிக்கரை முழுதாக நீக்க முடியாது! நகத்தை கொண்டு உரித்தால் ஸ்டிக்கரின் மேற்பகுதி மட்டும் தனியாக பிரியும், பிறகு வெண்மையான ஸ்டிக்கரின் அடிப்பகுதி தெரியும்! அப்படி எதைக் கொண்டுதான் ஒட்டுவார்களோ தெரியவில்லை, கொலைவெறியோடு சுரண்டினாலும் ஆங்காங்கே பசையும், அரைகுறையாய் கிழிந்த ஸ்டிக்கரும் நமக்கு பெப்பே காட்டும்! சோப்புத் தண்ணீரில் ஊற வைத்தாலும் வராது! பசையின் வீரியத்தைப் பொறுத்து ஸ்டிக்கர் முழுவதுமாய் பிரிய சில மாதங்களோ அல்லது சில வருடங்களோ ஆகலாம்!!! இதற்காகவே புது டம்ளரில் குடிக்க (குடிநீர் அல்லது காஃபிதான்!) விரும்புவதில்லை. பிசுக் பிசுக் என்று விரல்களில் பசை ஒட்டினாலே எரிச்சலாக இருக்கும், இதே காரணத்திற்காக புதுத் தட்டிலும் சாப்பிடுவதில்லை! :)

அன்புள்ள பாத்திர தயாரிப்பாளர்களே, வியாபாரிகளே பாத்திரங்கள் உங்கள் நிறுவனத்தில்தான் வாங்கப்பட்டது என்ற பேருண்மை, நாங்கள் அதை வாங்கும் போதே எங்களுக்கு தெரியும்! எப்போதாவது எட்டிப் பார்க்கும் விருந்தாளிகளுக்கு இந்த பாத்திரங்களின் வடிவமைப்பு பிடித்திருந்தால் 'எந்த கடையில வாங்கினீங்க, நல்லா இருக்கே!' என்று எங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள்! எனவே, தயவு செய்து பாத்திரங்களில் ஸ்டிக்கர் ஒட்டாமல் அல்லது எளிதில் பிரியகூடிய வகை ஸ்டிக்கர்களை மட்டுமே ஒட்டி விற்றால் அவை எங்கள் கைகளில் ஒட்டாமல் இருக்கும்!

14 comments:

  1. சின்ன சின்ன செய்தியாக இருந்தாலும் நல்ல நல்ல செய்தியாகத் தான் சொல்கிறீர்கள். இந்த பதிவை பிரிண்ட் எடுத்து அனைத்து பாத்திரக்கடையில் ஒட்டுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொல்'கிறேன்.

    :D

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் துணைக்கு வாங்களேன் ப்ளீஸ்! ;)

      Delete
  2. த(ட)ம்பளிரிலும் தம்கட்டி ஆராய்ந்திருக்கிறீர்களே! :) :)

    ReplyDelete
    Replies
    1. (குடிக்கற) தண்ணியிலேயே கை வச்சுட்டாங்க அதான்! அந்த டம்ளர் போட்டோவ பார்த்தீங்கல்ல? சகிக்கல! ;)

      Delete
  3. கொஞ்சம் மண்ணெண்ணெய்யை துணியில் நனைத்து (ஸ்டிக்கர் உரித்த பின்) அந்த பிசுபிசுப்பு உள்ள இடத்தில் அழுத்தி தேய்த்தால் போயே போச்...

    ReplyDelete
    Replies
    1. அட! ஆனா, கெரசினுக்கு எங்க போறது?! :D

      Delete
    2. //கெரசினுக்கு எங்க போறது?//

      ஒரு கேனை எடுத்துக்கொள்ளவும் நேராக சென்றாலும் சரி அல்லது வளைந்து வளைந்து சென்றாலும் சரி பாதையில் குறுக்கே வரும் சைக்கிள், பைக் இன்னபிற வாகனங்களின் மீது முட்டி மோதாமல் மண்டையை உடைத்துக்கொல்லாமல் லாவகமாக பயணித்து எண்ண கடையை (என்ன கடையை?) அணுகவும்! அங்கிருக்கும் கடைக்காரரிடம் அவர் கேட்கும் முன்பே நீங்கள் கேட்கவும்!

      என்ன வேணும்?

      அவர் அதற்க்கு இப்படி பதிலளிக்க கூடும், யோவ் நான்தானே கடைக்காரர்? நான்தானய்யா கேக்கணும்?

      ஆமா.!

      அப்பறம் எதுக்குயா நீ கேக்குற, நான் கேக்குறேன்

      சரி...கேளுங்க!

      உனக்கு என்ன வேணும்?

      என்ன வேணும்!

      யோவ் காலையிலேயே வருத்தெடுக்காதய்யா? என்னதான்யா உனக்கு வேணும்!

      வறுத்தெடுக்க இல்லைங்க.., விளக்கு எரிக்கிற மண்ணெண்ணெய் வேணும்!


      யோவ் நீ எண்ணையா கேட்டே..!

      உன்னை எவன் கேட்டது..! எனக்கு எண்ணெய் வேணும்!


      எண்ணெய் ஊற்றியவுடன்.. நீங்கள் கேட்க வேண்டும்... ஆமா இது நல்லண்ண தானே?

      யோவ்.. முதல்ல நீ மண்ணெண்ணெய் தானே கேட்டே..?

      பதராதய்யா.. நான் சுத்தமானதான்னு கேட்டேன்! இறுதியாக... ஆமா இது மண்ணெண்ணெய் தானே என்று ஒரு கேள்வியை கேட்டு அவரை இந்திய எல்லையை விட்டே ஒட்டவைத்துவிட்ட வெற்றியோடு வீடு வந்து சேர வேண்டும்!

      இது தான் கெரசின் வாங்கும் வழி! :D :D

      Delete
    3. பதிவை விட நீளமானதொரு பின்னூட்டத்தை இட்டு வரலாற்றுச் சாதனை படைத்தது விட்டீர்கள்! ;) :D

      பெங்களூரில் எண்ணெய்க் கடையில், மண்ணெண்ணெய் கிடைப்பதில்லை! :) :) :)

      பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினால் கூட ஸ்டிக்கர் அகன்று விடும்! :D

      Delete
  4. ஆமா நானும் பார்க்கிறான் அந்த பயபுள்ள தான் மொக்கை போடாம எழுதனும்னு ஒரு டொமைன் வாங்கி போட்ருக்கு.. இங்கேயும் வந்து மொக்கை போடுறாய்ங்க .. உடனடியாக சீரியஸ் பதிவு போடு மச்சி.. ஹி ஹி

    ReplyDelete
    Replies
    1. ஓ... அப்பா இது சீரியஸ் ப்ளாக்கா? அது தெரியாம போச்சே...

      :D :D :D

      Delete
    2. //உடனடியாக சீரியஸ் பதிவு போடு மச்சி//
      போட்டா போச்சு! :)

      Delete
  5. gas stove flame la kaanbithu pinbu easy ya remove seiyalaam

    ReplyDelete

No Word Verification, No Comment Moderation & No Anony filtering!

Note: Only a member of this blog may post a comment.