Tuesday, August 28, 2012

முதல் (குறும்)பதிவு!

நண்பர்களே, வணக்கம்! என் பெயர் கார்த்திக்! ஏற்கனவே www.bladepedia.com என்ற வலைப்பூவில் எழுதி வருகிறேன்! 'அப்புறம் ஏன் இந்த வெட்டி வேலை?!' என்று நீங்கள் கேட்கலாம்! ப்ளேட்பீடியாவிற்கு என்று ஒரு இமேஜ் உள்ளது (அப்படியா?)! ஓரளவு உபயோகமுள்ள(!) பதிவுகளாக எழுதி வருகிறேன்! சரி, முறைக்காதீர்கள்! டீல் இதுதான் - பக்கம் பக்கமாய் எழுதினால் அது ப்ளேட்பீடியாவிலும், பத்தி பத்தியாய் எழுதினால் அது குட்டிப்ளேடிலும் வெளிவரும்! :) எழுத நிறைய விஷயங்கள் இருக்கிறது, ஆனால் அவற்றை எல்லாம் ப்ளேட்பீடியாவில் எழுதி மொக்கை போட விரும்பவில்லை! எழுத வேண்டும் என்று நினைப்பதை, அதிகம் அலட்டிகொள்ளாமல் ஒரு போஸ்ட் கார்டில் எழுதுவதைப் போல, சட்டென்று casual ஆக எழுதத்தான் இந்த புதிய வலைப்பூ!

இதையே ட்விட்டரிலோ, ஃபேஸ்புக்கிலோ, கூகிள் பிளஸ்ஸிலோ செய்யலாம்தான்! ஆனால் அப்படி எழுதினால் தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் வந்து தொலைக்காதே! ;) அதுவுமன்றி, அந்தத் தளங்களில் எனது நண்பர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவே! இந்த தளத்திற்கு என்ன பெயர் வைப்பது என்பதே பெரிய குழப்பமாகத்தான் இருந்தது! நான் பரிசீலித்த பெயர்களில் சில:
| குட்டிப்ளேடு! | குறும்பதிவு! | குறும்பதிவன்! | போஸ்ட் கார்டு பதிவுகள்! |

எனது அதி தீவிரவாதி வாசகர் திண்டுக்கல் சரவணன், வலைப்பூ பெயரில் ஒரு 'ப்ளேடு டச்' இருக்க வேண்டும் என விரும்பியதால் குட்டிப்ளேடு தேர்வாகியது! சரி, வளவளவென எழுதினால் இந்த வலைப்பூவின் நோக்கம் தோற்று விடும்! எனவே, இப்போதைக்கு bye-bye! :)

17 comments:

  1. ப்ளேடுக்கே உரிய பாணியில் அழகான அறிமுகம் நண்பரே:) ஆனால் திண்டுக்கல் என்பதற்கும் சரவணன் என்பதற்கும் எனது வலைப்பூக்களின் லிங்குகளைக் கொடுத்த மர்மம் என்ன?

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கேள்விக்கு விடை, இந்த கேள்வியில் இருக்கிறது! ;)
      "போஸ்டு போடும் முன்பே மெம்பர் ஆகிய வாசகர் யார்?"
      :) :) :)

      Delete
  2. உங்கள் அழகிய எழுத்துக்களால் ஈர்க்கப்பட்ட எனக்கு மேலும் ஒரு விருந்தா??? இன்ப அதிர்ச்சி கார்த்திக் அவர்களே. முதல் பதிவிலேயே உங்கள் முத்திரையைப் பதித்து விட்டீர்கள்.

    உங்களது முதல் பதிவில் என் பெயரைக் குறிப்பிட்டு உங்கள் எழுத்துக்களால் மயங்கியவனை அன்பாலும் மயக்கிவிட்டீர்கள் மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. இரண்டு முகம், இரண்டு வலைப்பூ - ஆனால், ஒரே ஆள்! ;) நான் என்னை சொல்லல! :)

      Delete
  3. Replies
    1. உங்க Elder Brother தான் உங்களுக்கு "தட்டி" கொடுக்க சொன்னார்...

      வாழ்த்துக்கள் சகோ.!

      Delete
    2. "ப்ளேடுக்கே ப்ளேட் போட்ட பாஸித்" என்று வரலாறு பேசட்டும்.

      (வாழும் வரலாறை சொல்லவில்லை)

      :D :D :D

      Delete
    3. :) :)

      //(வாழும் வரலாறை சொல்லவில்லை)//
      அவர்தான் அவரோட சுவடுகளை இந்த பதிவுல விட்டிருக்காரே! ;)

      Delete
  4. இதுக்கு முன்னால இங்கே நான் போட்ட கமெண்ட் ஒன்றை காணவில்லை, தேடி கண்டுபிடிக்கவும் இல்லையேல் CBI விசாரணை கோரப்படும்! :)

    அதுல நல்ல ஒரு வாழ்த்து கவிதை சொல்லியிருந்தேன்! அதை காணாமல் போகச் செய்ததில் வெளிநாட்டு சதி ஏதாவது இருக்குமா? :) :)

    ReplyDelete
    Replies
    1. ஸ்பாமில் கூட இல்லையே?! :) நீங்கள் எந்த ப்ளாகில் கமென்ட் போட்டீர்கள்? ;)

      Delete
    2. ஆங்.. அதுதான் மறந்திருச்சு! :D

      BTW கருத்துரை சொல் சரிபார்ப்பை நீக்கவும்! சத்தியமா நான் ரோபாட் இல்லை! :)

      Delete
    3. //சத்தியமா நான் ரோபாட் இல்லை! :)//
      Birth certificate please! ;)

      Delete
  5. வாழ்த்துக்கள் நண்பரே!

    ஸ்ரீ....

    ReplyDelete
  6. ம்ம் கலக்குங்க... நான் புதிதாக ப்ளேடுபிடியா படிக்க ஆரம்பிச்சிருக்கேன். குட்டிப்ளேடையும் சேர்த்து படிக்கிறேன்.

    ReplyDelete

No Word Verification, No Comment Moderation & No Anony filtering!

Note: Only a member of this blog may post a comment.