Wednesday, September 26, 2012

நான் மற்றும் மேலும் சில!

பல நாள் கழித்து நான் 'நான்' படம் பார்த்தேன் (எப்படி வேண்டுமானாலும் அர்த்தம் கொள்ளலாம்!!!). "Naan" என்று கூகிள் இமேஜ் சர்ச் செய்ததில் இந்தப் படம்தான் கிடைத்தது - ஹி ஹி ஹி! :) வழக்கமான கோலிவுட் பாணியில் இருந்து விடுபட்டு மாறுதலான கதைக்களனுடன் வந்திருக்கும் படம். குறைகள் கண்கூடாக உறுத்தினாலும், படம் சுவாரசியமாக இருந்தது! வாழ்க்கையைத் தொலைத்த ஒருவன், இறந்து போன எவனோ ஒருவனின் அடையாளத்தை திருடி புதிதாய் வாழ நினைப்பதுதான் படத்தின் கான்செப்ட். நல்ல வேளையாக நாம் பார்த்து சலித்த ஆள் மாறாட்ட காமெடிப்(!) படங்களைப் போலில்லாமல், கொஞ்சம் கிரைமும் கொஞ்சம் த்ரில்லும் தடவிய சாண்ட்விச்சாய் வந்திருக்கிறது. விஜய் ஆண்டனி அமைதியாக நடித்துள்ளார் - இந்தப் படத்திற்கு தேவையான நடிப்பு இவ்வளவுதான் (அந்த அழுகைக் காட்சியைத் தவிர). ஆனாலும், அவரது உண்மையான நடிப்புத் திறமை இனி வரும்(?) படங்களில்தான் தெரியும்! சித்தார்த் கவர்கிறார், மக்காயல பாட்டு கலக்கல் - சித்தார்த் ஓஓ என கண்களையும், உதடுகளையும் குவித்து பாடுவது நல்ல காமெடி. அவருக்கு போட்டியாக ரூபா மஞ்சரியின் டேன்ஸ் ஸ்டெப்புகள் செம காமெடி. இவை போதாதென்று, படத்தில் காமெடி இல்லாத குறையை அந்த போலிஸ் ஆஃபிஸர் தீர்த்து வைக்கிறார் - இவ்வளவு மொக்கையாக புலன் விசாரணை செய்யும் போலீஸை இது வரை பார்த்ததில்லை. குறைகள் பல இருந்தாலும், நான் - நல்ல டைம் பாஸ்!

'நான் ஈ' தயாரிப்பாளர்கள் இந்தப் படத்தின் மீது வழக்கு தொடராதது ஆச்சரியம்தான். 'ஆனந்த தாண்டவம்' படத்தின் தயாரிப்பாளர்கள் தாண்டவம் தலைப்பின் மீது இன்னமும் வழக்கு போடாதது அதை விட ஆச்சரியம்! :) வெளிவராத இரண்டு படங்கள் ஒரே மாதிரியான தலைப்புகளைக் கொண்டிருந்தால்தான் இந்த பிரச்சினையோ?! ;)

கிழடு தட்டியிருந்தாலும் விக்ரமின் தாண்டவம் பட ஸ்டில்கள் (சில) அசத்தலாக உள்ளன. ஆனாலும் தமிழ் சினிமா ஸ்டில்களையும், போஸ்டர்களையும், டிரைலர்களையும் கொஞ்சமும் நம்ப முடியாது! இது போன்ற ஸ்டைலான புரமோஷன்களை நம்பி படம் பார்க்கப் போனால் - ஏதாவது ஒரு பாடல் காட்சியில் அந்த பில்ட்-அப்புகள் சில நொடிகளில் தோன்றி மறையும்!

அப்புறம் Expendables 2 படம் பார்த்தேன், இரைச்சலான படம். இருந்தாலும் "Rest In Pieces " என்ற அந்த ஒரு டயலாகுக்காகவே பார்க்கலாம்! :) வான் டம்மா அது? ஹ்ம்ம்... காலத்தின் கோலம்!!!

இப்போது புதியதாய் வரும் தரமான தமிழ் காமிக்ஸ்கள் புத்தகங்கள் ஒவ்வொன்றும் என்னுடைய ஒரு சில நாட்களை விழுங்கி விடுகின்றன - படிப்பதையும், பதிவிடுவதையும் சேர்த்து! அப்படி என்ன பெரிதாக அதில் இருக்கப்போகிறது என நினைப்பவர்கள் இதைப் படியுங்கள்!:
வன்மேற்கின் வஞ்ச நெஞ்சங்கள் - முத்து காமிக்ஸ் வைல்ட் வெஸ்ட் ஸ்பெஷல்!

12 comments:

  1. >>>இனி வரும்(?) படங்களில்<...

    உங்களுக்கு குசும்பு கொஞ்சம் இல்ல..வண்டி வண்டியாய் இருக்கு! :)

    பாவம் அவன் என்ன லச்சியத்தோட நடிக்கவந்தானே? இனிமே படம் அவன் வருமான்னு இப்பிடி கேள்வி கேட்டா.. விளங்கிரும்! :)

    ReplyDelete
    Replies
    1. தூக்க கலக்கத்துல கமெண்டு போட்டா இப்படித்தான் தப்பு தப்பா வரும்! :)

      Delete
  2. // ஏதாவது ஒரு பாடல் காட்சியில் அந்த பில்ட்-அப்புகள் சில நொடிகளில் தோன்றி மறையும்!//

    பில்லா 2 பற்றி நீங்கள் கூறவில்லை தானே.

    Expendaples 2 நானும் பார்த்தேன் ஆக்சன் அட்டகாசம்.
    வசனங்களில் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்வது மற்றும் ஹீரோக்கள் அறிமுகங்கள் நன்றாக இருந்தன.
    ஆனால் வான் டாம் மற்றும் அர்னால்ட் இருவரும் தான் பாவம் கிழடு தட்டி விட்டது.

    ReplyDelete
    Replies
    1. இல்லை பொதுவாக பல படங்களில் இப்படித்தான். உதாரணத்திற்கு விஜயின் சுறா, விக்ரமின் ராஜபாட்டை, அஜீத்தின் ஏகன்...

      Delete
    2. உண்மை.அப்போ நீங்க இந்த எல்ல படத்தையும் பாத்துடீங்க?

      Delete
    3. :) :) :) ஹெர்லக் ஷோம்ஸ்!

      //ராஜபாட்டை// அந்தப் பாட்டை மட்டும் பார்த்துருக்கேன்!
      //சுறா// அந்தப் பாட்டை மட்டும் பார்த்துருக்கேன்!
      //ஏகன்// இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக பார்த்தேன்! ;)

      Delete
  3. தாண்டவம் பட ஸ்டில்கள் அசத்தல் தான்... படம் எப்படியோ...?

    ReplyDelete
  4. நானும் நான் சண்டே தான் பார்த்தேன். நல்ல த்ரில்லர். கடைசியில் ராமநாதபுரத்தில் போலீஸ் விசாரிக்கக் போகும் போது, விசாரிக்க போகும் காவலர் சீக்கிரம் போக வேண்டும் என்று கேட்டு கொண்டு இருப்பார். ஆனால் SI இதை பார்த்து விட்டு போங்க என்று கூற விசாரிக்காமலேயே விசாரித்துவிட்டேன் என்று சொல்லிவிடுவார் என்று நினைத்தேன். ஆனால் காவலர் போய் விசாரிக்க கதவை தட்டும் போது உள்ளிருந்து ஹீரோவே வந்து திறப்பதும் நல்ல திருப்பம்.

    ரூபாவுடைய டான்ஸ் ஸ்டெப்ஸ் நிச்சயமாக காமெடி தான். "மக்கா சோளம் மக்கா சோளம் சாப்பிடலாமா ?" ன்னே அந்த பாட்டு எனக்கு கேட்குது. அசோக் ஒரு playboy ஆக காண்பிக்க ஒரு அழகான ஹீரோயினை வேஸ்ட் பண்ணி இருக்கிறார்கள். அசோக் கேரக்டரும் அரை குறையாக இருக்கிறமாதிரி தெரிகிறது.

    நிறைய ஓட்டைகள் இருக்குது. இவர் அசோக் மாதிரி நடித்தார் என்பதை அனுயா மற்றும் அனுயா குடும்பத்தினருக்கு தெரியும். காலேஜில் பிரச்னை பண்ணும் பையனும் ஹீரோ தானே விழுந்து அசோக் தன்னை அடிக்கிற மாதிரி நடித்து கொண்டிருக்கும் போது பார்த்து விடுகிறான்.

    ஹீரோ அசோக் உடைய செல் போனை உபயோகித்து அசோக் போலவே பேசுகிறார். செல் டவர் வைத்து எங்கிருந்து அசோக் பேசினார் என்பதை துருவும்போது கண்டு பிடித்து விட மாட்டார்களா ? இப்படி ஏகப்பட்ட சிந்தனைகளை நமக்கு கொடுத்து விட்டு படத்தை முடித்து விடுகிறார்கள்.

    ஹீரோ கொலை செய்ய போகிறார் என்றார் பைக் திருகும் சவுண்ட் போல ஒன்று கொடுக்கிறார்கள். கேட்டீர்களா? :D

    ReplyDelete
    Replies
    1. குட்டிப்ளேடில் படு நீளமான கமென்ட் இதுவாகத்தான் இருக்க முடியும்! :)

      //ஹீரோ கொலை செய்ய போகிறார் என்றார் பைக் திருகும் சவுண்ட் போல ஒன்று கொடுக்கிறார்கள்//
      சித்திரங்களை மட்டும்தான் ஆழ்ந்து கவனிப்பீர்கள் என நினைத்தேன்! :) உங்களுக்கு சிறந்த கவனிப்பாளர் விருது கொடுத்து விட வேண்டியதுதான்! :)

      Delete

No Word Verification, No Comment Moderation & No Anony filtering!

Note: Only a member of this blog may post a comment.