சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் எதிரொலியாக, பெங்களூர் ட்ராபிஃக் போலீஸ் - 'கார்களில் உள்ள சன் ஃபிலிமை அகற்ற வேண்டும்'
என்று சில மாதங்களுக்கு முன் அறிவித்ததுமே நீதிக்கு தலை வணங்கி, கார் கண்ணாடிகளின் கற்பை ஆள்
வைத்து சூரையாடினேன்! உறித்த கோழி போலாகி விட்ட காரை, வெளியில் எடுக்கவே சங்கடமாக இருக்கிறது! கீறல் விழுந்த கண்ணாடி வழியாக பார்த்தால் ரோடு,
கோடு கோடாக தெரிகிறது! சிக்னலில் நிற்கும் போது பக்கத்து வண்டிக்காரர்கள்
ஆவலாய் காருக்குள் நோட்டமிடுகிறார்கள்! வெயில் அடித்தால் கண்கள்
கூசுகின்றன! இதை எல்லாம் கூட பொறுத்துக் கொள்ளலாம்! முக்கால்வாசி பேர்
இன்னமும் கார்களில் சன் ஃபிலிம் அகற்றாமலேயே பவனி வருகிறார்கள்! அவர்களின்
நக்கலான பார்வையைத்தான் தாங்க முடியவில்லை!
லட்சக்கணக்கில் ஃபைன் கலெக்ஷன் செய்ததாக செய்திகள் மட்டும் வெளியாகின்றன! ஆனால், ட்ராபிஃக் கான்ஸ்டபிள்களோ இன்னமும் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுபவர்களை பிடிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறார்கள்! ரோட்டை அடைக்காமல் 'காரியத்தை முடிக்கலாம்' என்பதுதான் காரணமா என்று தெரியவில்லை! சன் பிலிம் அகற்றாத கார்களையும் வளைச்சு வளைச்சு பிடிங்க சார், ப்ளீஸ்!
தமிழ்நாட்டுல நிலைமை எப்படி?! 
லட்சக்கணக்கில் ஃபைன் கலெக்ஷன் செய்ததாக செய்திகள் மட்டும் வெளியாகின்றன! ஆனால், ட்ராபிஃக் கான்ஸ்டபிள்களோ இன்னமும் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுபவர்களை பிடிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறார்கள்! ரோட்டை அடைக்காமல் 'காரியத்தை முடிக்கலாம்' என்பதுதான் காரணமா என்று தெரியவில்லை! சன் பிலிம் அகற்றாத கார்களையும் வளைச்சு வளைச்சு பிடிங்க சார், ப்ளீஸ்!
Tweet | |||||
//சன் ஃபிலிமை அகற்ற வேண்டும்//
ReplyDeleteஅவங்க சொன்னது SUN PICTURE அகற்றவேண்டும் என்பதை, உங்களின் தவறான புரிதலுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது! :D
ஆனாலும் நீங்க எடுத்ததுக்காக மத்தவய்ங்களை வளைச்சு வளைச்சு பிடிங்கன்னு இப்பிடி வேண்டி விரும்பி கேட்டுக்குற உங்க நல்ல மனசை நினைச்சா எனக்கு அழுகை அழுகையா வருது! :D
//அவங்க சொன்னது SUN PICTURE அகற்றவேண்டும்//
Deleteஅடடா இது எனக்கு தெரியாம போச்சே! ;) இப்ப எல்லாம் சன் பிக்சர்ஸ் படம் வெளியிடறாங்களா என்ன? டிவியில அஞ்சு செகண்டுக்கு ஒரு தபா, ஒரே படத்தோட ட்ரைலர் பார்த்து ரொம்ப நாள் ஆகுது! :D
//வேண்டி விரும்பி கேட்டுக்குற//
போறவன் சும்மா போகாம காருக்குள்ள எட்டி பார்த்தா இதான் கதி! ;)
தமிழ்நாட்டில் எல்லாமே ஒரு நாள் முதல்வர் மாதிரி.. வருசத்துல ஒரு நாள் மட்டும் இத கடை பிடிப்பாங்க.
ReplyDeleteஆனா சன் ஃபிலிம், ஹெல்மெட் மாதிரி இல்லையே! கழட்டி, கழட்டி மாட்ட முடியாதே! :(
Deleteஆரம்பமே களை கட்டுதே...
ReplyDeleteதொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...
நன்றி :)
Deleteசின்ன வேண்டுகோள் : இந்த Comment Moderation-யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... நன்றி...
ReplyDeleteபுதிய தளம் அல்லவா, இன்னமும் நிறைய வேலை பாக்கி இருக்கிறது! :)
DeleteWord Verification தொல்லை இனி இல்லை! :) எடுத்து விட்டேன்!
நல்ல வேளை, எடுத்துவிட்டீர்கள். இதை எதிர்த்து வரலாற்று சுவடுகள் தலைமையில் "பின்னூட்டம் நிரப்பும் போராட்டம்" நடத்தலாம் என்று நினைத்திருந்தேன்.
Delete:) :) :)
துவக்கமே அருமை நண்பா.
ReplyDeleteசன் பிலிமை அகற்றினால் கார் மட்டும்தான் கற்பிழக்கும், சன் பிலிமை அகற்றவில்லை என்றால் ...
குட்டி பசங்க படிக்கற பிளாக்ல இதென்ன "A" பேச்சு! ;)
Deleteயார் அந்த குட்டி பசங்க....///குட்டி பசங்க படிக்கற பிளாக்ல இதென்ன "A" பேச்சு! ;)///இதை படித்த உடனே எனக்கு செம்ம சிரிப்பு தான் வந்தது....bladebedia linkwithin லிங்க் எல்லாம் இங்க குடுத்து இருக்கீங்க ....
Deleteஒரு விளம்பரம்தான் ;)
DeleteAarampame adi thool
ReplyDeletenandri nanbaa!
Delete